இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
 
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார்.
 
சிந்தனைகள்:
 
1. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.
 
2. நல்ல வழியில் சம்பாதித்ததை சமுதாயத்திற்காகச் செலவிடுவது பெரும் பாக்கியமாகும்.
 
3. வெற்றியோ தோல்வியோ… எதையும் எதிர்பார்க்காமல் ஓடிக் கொண்டிரு.
 
4. தீமைகளோடு போரிடுங்கள். அவற்றை வென்றால், அமைதி தேடி வரும்.
 
5. பிறருடைய கருத்துக்கு செவிசாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.
 
6. தன்னிடம் நம்பிக்கை இல்லாத மனிதன், கடவுளிடமும் உறுதியான நம்பிக்கை வைக்க முடியாது.
 
7. துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.
 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here