PENTAX Image

உலகின் ஐம்பெருங்கண்டங்களில் சரஸ்வதி கடாட்ஷமும் லக்ஷ்மி கடாட்சமும் ஒருங்கே அமைந்த ஐரோப்பியக்கண்டத்தில் தனவான்களும் பக்தியால் நிறைந்த தமிழர்களும் புலம் பெயர்ந்த வாழ்வில், மக்களால் கலை கலாச்சாரம் இவைகள் நிலைத்து நிற்க சுவர்ணபூமியாம் சுவிற்சலாந்து நாட்டில் சூரிச் மாநகரில் அட்லிஸ்வீல் பதியின் அல்ப்ஸ் மலையின் பின்புறத்தே ஊற் ஊற்றெளுந்து ஓடி வரும் சீல் நதி ஓரத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியப் பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான விகாரி வருடம், ஆடித்திங்கள் 24ம் நாள் 09.08.2019 வெள்ளிக்கிழமை துவஜாரோஹண கொடியேற்றவைபவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்களுக்கு உற்சவம் நடைபெற இறைவன் திருவருள் கூடியிருப்பதால் அத்தருணம் முருகன் அடியார்கள் அனைவரும் தேவஸ்தானத்துக்கு வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து இறைவன் அருள்பெற்று நல்வண்ணம் வாழ்வீர்களாக.

துவஜாரோஹண கொடியேற்றம் 09.08.2019 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி

மாம்பழத்திருவிழா 14.08.2019 புதன்கிழமை

வேட்டைத்திருவிழா 15.08.2019 வியாழக்கிழமை

சப்பறத்திருவிழா 16.08.2019, வெள்ளிக்கிழமை

தேர்த்திருவிழா 17.08.2019, சனிக்கிழமை

தீர்த்தத்திருவிழா 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை

பூங்காவனத்திருவிழா 20.08.2019 திங்கட்கிழமை

வைரவர்மடை 21.08.2019 செவ்வாய்க்கிழமை.

 

தினமும் மாலை ஆன்மீக அருளுரை நடைபெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here