திறந்திருக்கும் நேரம்
- 8.30 - 13.00
- 18.00 - 21.00
- 8.00 - 21.00
நித்திய பூஜைகள்
- காலை 8.30
- மாலை 7.30
- 8.00 / 12.00 / 19.30
பதிகங்கள்
-
திருவெம்பாவை
(திருவண்ணாமலையில் அருளியது)
திர...
-
பஞ்சபுராணம்
சிவாலயங்களில் பூசைகளின் போது

ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்
கலியுக வரதனாகிய சிவசுப்பிரமணியர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடங்களில் சுவிற்சர்லாந்திலுள்ள சூரிச் மாநகரமும் ஒன்றாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மலைப்பாங்கான இடத்தில் வற்றாது பெருகிக் கொண்டிருக்கின்ற அருவிக் கரையில் எழில் பொங்க வீற்றிருக்கின்ற காட்சிதான் என்னே!
இவ்வாலயம் 1994 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி அமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது. இவ் ஆலயக் கர்ப்பக் கிருகத்தில் ஸ்ரீ முருகப்பெருமானின் வேல் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது. பரிவார மூர்த்தங்களாகிய நடராஜர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள். விக்கிரகங்கள் யாவும் ஜம்பொன்னால் அமைக்கப் பெற்றுத் தெய்வீக சாந்நித்தியப் பொலிவுடன் விளங்குகின்றன.
இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் ஆவணி மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமையைத் தீர்த்தோற்சவ நாளாகக் கொண்டு பத்துத்தினங்கள் நிகழ்த்தப் பெறுகின்றது. இவ்வாலயம் பொதுச்சபையையும் நிர்வாகசபையையும் கொண்டது. இவ்வாலய அர்ச்சகர்களாகச் சிவப்பிராமணர்கள் விளங்குகின்றனர். மஹாற்சவ காலங்களில் தினமும் மகேஸ்வர பூசை நிகழ்த்தப்படுவதோடு நாதஸ்வர கானமும் தொடர் சமயச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
எல்லா இனத்தவர்களும் எல்லா மதத்தவர்களும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடியற்றுவது மனநிறைவைத் தருவதாகும். மூர்த்தி, தல, தீர்த்த மகிமைகளுடன் கூடிய இத்தலத்திற்குச் சென்று ஸ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் திருவருள் பெற்று உய்தி பெறுவோமாக.
மாத நிகழ்வுகள்
-
Jun242022
விஷ்ணுபகவானுக்குரிய விரதம்
-
Jun252022
17:00 - 21:00 : அபிஷேகம், உள்வீதி வலம் வருதல்
-
Jun262022
சிவனுக்குரிய விஷேட விரதம்
16:00 மணிக்கு அபிஷேகம்
-
Jun282022
அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம...
-
Jul032022
17:30 : நாராயண பஜனை
-
Jul052022
முருகனுக்கான விரதம்
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று <...
-
Jul132022
19:00 :- விஷேட பூஜை
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ள...
-
Jul172022
விநாயகரை நோக்கிய விஷேட வழிபாடு
-
Jul302022
மாலை : அபிஷேகம், பஜனை, படிப்பூஜை